அவதாரம்
சிங்கப்பூர்
சட்டை போட்டு
சீனத்து
பேண்ட்போட்டு
பந்தபாசம்
விட்டுப்புட்டு
பணத்துக்காக
கஷ்டப்பட்டு
கடன்கள்
நிறைந்திருக்க
வெளிநாடு
வந்தமுங்க
நாங்க வெளிநாடு வந்தமுங்க
மானம் எல்லாம் விட்டுப்புட்டு
மாடுபோல
கஷ்டப்பட்டு
தரக்குறைவான
பேச்சுக்கேட்டும்
தன் அடக்கத்துடன் இருந்தோமுங்க
தன் அடக்கத்துடன் இருந்தோமுங்க
முகத்தில்
கொஞ்சம் ஒளியிருந்தும்
மனது நிறைய வலியிருந்தும்
வீட்டையே
நினைச்சுக்கிட்டு
கண்மூடி
உறங்கப்போனா
பதறிப்போய்
பாதி இரவினில் விழிக்கவேண்டி
கனவில்
வருகிறது
கடன்களின்
பிள்ளைகள்!