Saturday 10 August 2013

உங்கலுக்கு தெரியுமா

75 சதம மீட்டர் நீளமுள்ள, பறக்காத, பெரிய ஓக் எல்லா ஓக்குகளிலும் பெரியதாகும். இவை நன்றாக நீந்தக் கூடியவை. தங்கள் சிறகுகளை உபயோகித்து நீருக்கடியில் நீந்த வல்லவை. பெரிய ஓக்குகள் ஒரு வருடத்தில் ஒரு முட்டையை மாத்திரமே இடும்.
மற்ற பறவைகளை போல பெரிய ஓக்குகளால் பறக்க முடியாது. இதனால் தான் இப் பறவைகள் மனிதர்களால் அதிகமாக வேட்டையாடப்பட்டது. 8 ஆம் நூற்றாண்டிலிருந்தாவது இப் பறவைகள், உணவுக்காகவும், மெத்தைகள் செய்வதற்காகவும் வேட்டையாடப்பட்டன.

பெரிய ஓக்குகள் ஒரு காலத்தில், கனடாவுக்கு அப்பாலுள்ள தீவுகளிலும், கிறீன்லாந்து, ஐஸ்லாந்து, மற்றும் அயர்லாந்து இடங்களில் பெரும் எண்ணிக்கையில் காணப்பட்டன. காலப்போக்கில் இப் பறவைகள் அழிந்து போகும் வரை வேட்டையாடப்பட்டன. இவ்வினத்தின் கடைசிச் சோடிகள், 1844, ஜூலை 3ல் ஐஸ்லாந்துக்கு அப்பாலுள்ள ஒரு தீவில் வைத்துக் கொல்லப்பட்டன.

No comments:

Post a Comment