Sunday 25 November 2012


 வத்தக்குழம்பு வாசம்


புலிக் கண்மாயிலே
புளியமரத்தின் ஓரத்திலே
ஓலைக் குடிசையிலே
வற்றக்குழம்பு  வாசம் வீசயிலே
சானம் இட்ட தரையினிலே
தாயின் மடியினிலே
தலைசாய்ந்து படுக்கையிலே
உறங்கிய நேரமும் தெரியவில்லை
சுகமாக எழுந்தேன் காலையிலே
சிங்கை சென்றேன்  அன்று மாலையிலே
பஞ்சு மெத்தையிலே
படுத்து புரல்கையிலே
தூக்கம் வரவேயில்லை
நாகரீக உணவினிலே
நாக்கு செத்துப் போனதடி தாயே!
அன்று
நீ அன்பாய் பரிமாறிய வற்றக்குழம்பு

வாசம் இன்னும் வீசுதடி!

No comments:

Post a Comment