Monday 21 January 2013


நீ ஒன்றே

வயிற்றில் நான் எட்டி உதைத்தபோதுதான்
இவளின் வாலிபம் நொறுங்கிப்போனது
நான் பிறந்தேன்
இவளின் சந்தோசம் இறந்து போனது
இவளுக்காக இவள் கண்விழித்த நாட்களை விட
எனக்காக விழித்திருந்த நாட்களே அதிகம்
எனக்காக ஆலோலா பாடினாள்
என் மேல் தூசி படிந்தாலும்
அதன் துயரத்தை இவள் அனுபவிப்பாள்
இவள் அல்லவா என்னை பெற்றதாக நினைத்தேன்?
என்னை பெத்த இராஜா என்கிறாளே
நான் எப்படி?
என்னின் தேவைகளை
முகம் பார்த்து படித்துக்கொள்வாள்
இவ்வுலகில் எனக்காகவே வாழும் ஆத்மா
அன்பான உறவுகள் ஆயிரம் தேவையில்லை
உயிர்ப்பின் ரூபமே உண்மையே
அம்மா
நீ ஒன்றே போதுமே!.

சுவாசத்திலே!

என்னைப் பத்து மாதம் சுமந்த
தாயின் பாசம் இன்னமும் என் கண்களிலே
என் தாயை பெற்றபின்னும்
என் தாயை சுமந்துகொண்டிருக்கும்
என் தாய் நாட்டை எப்படி மறப்பது
நான் உயிருடன் ஊர் திரும்புவது
உண்மையின் கையிலே!
என்னுள்ளே சிறைபட்ட
என் தேசத்தின் காற்று
இன்னமும் பத்திரமாய் என்னுள்ளே
எனும் நம்பிக்கையில் கடந்து செல்கிறேன்
இங்கிருந்தே ஒருநாள்
இவ்வுலகிலிருந்து விடுபடுவேன் எனில்
என்னுள்ளே பத்திரப்படுதியுள்ள
என் தேசத்தின் காற்றை சுவாசித்தே இறப்பேன்.           

Saturday 19 January 2013



 மாற்றங்கள் வேண்டி
அறிவை அயல் நாட்டுக்கு விலை பேசி
ஆயுளைக் குறைத்துக் கொள்ளும்
எங்கள் நிலை மாறவேண்டும்
கற்றுக்கொடுத்த நாட்டைவிட்டு
அன்பற்ற கானகத்தில் வாழும்
எங்கள் நிலை மாறவேண்டும்
தொலைதூர தொலைபேசி வழி
தினம் ஆசைகளை தொலைக்கின்ற
எங்கள் நிலை மாறவேண்டும்
மரத்துப்போன உணர்ச்சிகளுடன்
மழைவெயிலில் தொடரும்
எங்கள் நிலை மாறவேண்டும்

Friday 18 January 2013


அவதாரம்

சிங்கப்பூர் சட்டை போட்டு
சீனத்து பேண்ட்போட்டு
பந்தபாசம் விட்டுப்புட்டு
பணத்துக்காக கஷ்டப்பட்டு

கடன்கள் நிறைந்திருக்க
வெளிநாடு வந்தமுங்க
நாங்க வெளிநாடு வந்தமுங்க
மானம் எல்லாம் விட்டுப்புட்டு
மாடுபோல கஷ்டப்பட்டு
தரக்குறைவான பேச்சுக்கேட்டும்
தன் அடக்கத்துடன் இருந்தோமுங்க
தன் அடக்கத்துடன் இருந்தோமுங்க
முகத்தில் கொஞ்சம் ஒளியிருந்தும்
மனது நிறைய வலியிருந்தும்
வீட்டையே நினைச்சுக்கிட்டு
கண்மூடி உறங்கப்போனா
பதறிப்போய்
பாதி இரவினில் விழிக்கவேண்டி
கனவில் வருகிறது
கடன்களின் பிள்ளைகள்!
 
எல்லாமுமாய் எனக்கு

பிரம்மன் செய்த பிரமாண்டம் நீ
நொடியினில் படைக்கும் அவனுக்கே
உனைப் படைக்க
ஆண்டுகள் நூறு பிடித்திருக்கும்
பூமிக்கு உன்னை அனுப்பிவிட்டு
யோசித்திருப்பான்
அவசரப்படடு அனுப்பிவிட்டோமே என்று
உன் இதழின் வரிகளை

படித்துப் பார்க்க
இந்த ஜென்மம் போதாது
நீ பேசிய வார்த்தைகளை
கொட்டியும் பார்க்கிறேன்
கோர்த்தும் பார்த்துவிட்டேன்
அர்த்தங்கள் தான் எத்தனை எத்தனையோ
நீ திட்டும் வார்த்தையாவும்
எனக்கு குட்டிக் கவிதைகள்
வாரக்கணக்கில் சுமந்த
உன்தாய்மேல் தான் எத்தனை பாசம்
வருடக்கணக்கில் சுமக்கவிருக்கும்
என்மேல் மட்டும்
ஏன் இத்தனை கோபம்
தினமும் நான் பிறக்கிறேன்
எல்லாம் உன்னாலே!
உருக்கமான என் பகலிலும்
நெருக்கமான என் இரவிலும்
விடியலாக தோன்றுவது
உன் முகம் மட்டுமே
ஆசைகள் கோடி
அத்தனையும் உன் கால்நகமளவே
எவ்வளவோ எழுதியாச்சு
அனைத்தும் உன் பெயர்தான்
பேச்சினூடே மனம் உச்சரிப்பது
உன்பெயர்தான்





இவள் தான் பார்த்த உடன் பற் றியது
மூளையின் முனங்கள்
கண் மூடிய தருணம் கூட
கண் விழித் துக் கொண்டிருக் கும்
அவள் நினைவிகள்
அங்கங்கள் எல்லாம் அழகு தான்
 உண் ஆள்காட் டி விரல் கூட அழகு தான்
 நீ எதையாவது சுட் டிக் காட்டயிலலே
 அதை விட அழகு நீ என்னை  சுட் டிக் காட் டயிலே
உண் மௌனம் போல் அழகில்லை
இந்த உலகில் எனக்கு
எப்போதும் அடிமை நான்
எனக்குள்  உணக்காக

Monday 14 January 2013


உண் பாதச் சூட்டில் பதிந்து விட்டால்
நான் செய்த பாவம் எல்லாம் போய்விடும்
பாதம் இல்லை இவை என்  பாவம் போக்க வந்த  சாபம்
இது மோகம் இல்லை மோட்சம்
கால் விரலில் கூட என்ன கலப்படமா பஞ்சு
நெஞ்சில் கலக்கிரது நஞ்சு