Saturday 10 August 2013

உங்கலுக்கு தெரியுமா

டோடோ அழிந்த பறவையினங்களில் ஒன்று. இது மொரீசியஸ் தீவில் வாழ்ந்த பறக்க முடியாத பறவையாகும். ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரமான டோடோ நிலத்தில் கூடு கட்டி வாழ்ந்தது; பழங்களை உணவாகக் கொண்டது.



கொன்றுண்ணிகளற்ற தீவில் வாழ்ந்த பறவை என்பதால் டோடோ மனிதர்களைக் கண்டு அஞ்சாமை அதன் அழிவுக்கு காரணமானது. மொரீசியஸ் தீவுகளுக்கு போர்த்துக்கேயர் 1505 இல் சென்றனர். பின்னர் டச்சுக்காரர்கள் அங்கு குடியேறினர். மனிதர்களாலும் அவர்களது வளர்ப்பு விலங்குகளாலும் ஏறத்தாழ நூறாண்டுக் காலத்தில் படிப்படியாக டோடோ பறவையினம் முற்றாக அழிக்கப்பட்டது

உங்கலுக்கு தெரியுமா

75 சதம மீட்டர் நீளமுள்ள, பறக்காத, பெரிய ஓக் எல்லா ஓக்குகளிலும் பெரியதாகும். இவை நன்றாக நீந்தக் கூடியவை. தங்கள் சிறகுகளை உபயோகித்து நீருக்கடியில் நீந்த வல்லவை. பெரிய ஓக்குகள் ஒரு வருடத்தில் ஒரு முட்டையை மாத்திரமே இடும்.
மற்ற பறவைகளை போல பெரிய ஓக்குகளால் பறக்க முடியாது. இதனால் தான் இப் பறவைகள் மனிதர்களால் அதிகமாக வேட்டையாடப்பட்டது. 8 ஆம் நூற்றாண்டிலிருந்தாவது இப் பறவைகள், உணவுக்காகவும், மெத்தைகள் செய்வதற்காகவும் வேட்டையாடப்பட்டன.

பெரிய ஓக்குகள் ஒரு காலத்தில், கனடாவுக்கு அப்பாலுள்ள தீவுகளிலும், கிறீன்லாந்து, ஐஸ்லாந்து, மற்றும் அயர்லாந்து இடங்களில் பெரும் எண்ணிக்கையில் காணப்பட்டன. காலப்போக்கில் இப் பறவைகள் அழிந்து போகும் வரை வேட்டையாடப்பட்டன. இவ்வினத்தின் கடைசிச் சோடிகள், 1844, ஜூலை 3ல் ஐஸ்லாந்துக்கு அப்பாலுள்ள ஒரு தீவில் வைத்துக் கொல்லப்பட்டன.

Thursday 9 May 2013


உன் கை பிடித்து நடக்கும் தூரம் நீண்டுகொன்டே இருக்க வேண்டும் கலப்படம் இல்லாத நடையை நீ எனக்கு கற்றுத்தருகையில் கஷ்டங்கள் எல்லாம் போக்குவபன் கடவுள் என்றால் சந்தேகமே வேண்டாம் ஒட்டு மொத்த கடவுளின் ஒரே உருவம் நீ தான் உண்னிடம் வேண்டத் தேவையில்லை நீ சிரித்தால் போதும் சில்லாய் போய்விடும் என் பாவம்
உன் கை பிடித்து நடக்கும் தூரம்                                               நீண்டுகொன்டே இருக்க வேண்டும்                                                  கலப்படம் இல்லாத நடையை நீ                                                                           எனக்கு கற்றுத்தருகையில்                                                                         கஷ்டங்கள் எல்லாம் போக்குவபன் கடவுள்  என்றால்                                   சந்தேகமே வேண்டாம்                                                                                           ஒட்டு மொத்த கடவுளின்                                                                                        ஒரே உருவம் நீ தான்                                                                                                                   உண்னிடம் வேண்டத் தேவையில்லை                                                                         நீ சிரித்தால் போதும்                                                                           சில்லாய் போய்விடும் என் பாவம்

Monday 21 January 2013


நீ ஒன்றே

வயிற்றில் நான் எட்டி உதைத்தபோதுதான்
இவளின் வாலிபம் நொறுங்கிப்போனது
நான் பிறந்தேன்
இவளின் சந்தோசம் இறந்து போனது
இவளுக்காக இவள் கண்விழித்த நாட்களை விட
எனக்காக விழித்திருந்த நாட்களே அதிகம்
எனக்காக ஆலோலா பாடினாள்
என் மேல் தூசி படிந்தாலும்
அதன் துயரத்தை இவள் அனுபவிப்பாள்
இவள் அல்லவா என்னை பெற்றதாக நினைத்தேன்?
என்னை பெத்த இராஜா என்கிறாளே
நான் எப்படி?
என்னின் தேவைகளை
முகம் பார்த்து படித்துக்கொள்வாள்
இவ்வுலகில் எனக்காகவே வாழும் ஆத்மா
அன்பான உறவுகள் ஆயிரம் தேவையில்லை
உயிர்ப்பின் ரூபமே உண்மையே
அம்மா
நீ ஒன்றே போதுமே!.

சுவாசத்திலே!

என்னைப் பத்து மாதம் சுமந்த
தாயின் பாசம் இன்னமும் என் கண்களிலே
என் தாயை பெற்றபின்னும்
என் தாயை சுமந்துகொண்டிருக்கும்
என் தாய் நாட்டை எப்படி மறப்பது
நான் உயிருடன் ஊர் திரும்புவது
உண்மையின் கையிலே!
என்னுள்ளே சிறைபட்ட
என் தேசத்தின் காற்று
இன்னமும் பத்திரமாய் என்னுள்ளே
எனும் நம்பிக்கையில் கடந்து செல்கிறேன்
இங்கிருந்தே ஒருநாள்
இவ்வுலகிலிருந்து விடுபடுவேன் எனில்
என்னுள்ளே பத்திரப்படுதியுள்ள
என் தேசத்தின் காற்றை சுவாசித்தே இறப்பேன்.           

Saturday 19 January 2013



 மாற்றங்கள் வேண்டி
அறிவை அயல் நாட்டுக்கு விலை பேசி
ஆயுளைக் குறைத்துக் கொள்ளும்
எங்கள் நிலை மாறவேண்டும்
கற்றுக்கொடுத்த நாட்டைவிட்டு
அன்பற்ற கானகத்தில் வாழும்
எங்கள் நிலை மாறவேண்டும்
தொலைதூர தொலைபேசி வழி
தினம் ஆசைகளை தொலைக்கின்ற
எங்கள் நிலை மாறவேண்டும்
மரத்துப்போன உணர்ச்சிகளுடன்
மழைவெயிலில் தொடரும்
எங்கள் நிலை மாறவேண்டும்

Friday 18 January 2013


அவதாரம்

சிங்கப்பூர் சட்டை போட்டு
சீனத்து பேண்ட்போட்டு
பந்தபாசம் விட்டுப்புட்டு
பணத்துக்காக கஷ்டப்பட்டு

கடன்கள் நிறைந்திருக்க
வெளிநாடு வந்தமுங்க
நாங்க வெளிநாடு வந்தமுங்க
மானம் எல்லாம் விட்டுப்புட்டு
மாடுபோல கஷ்டப்பட்டு
தரக்குறைவான பேச்சுக்கேட்டும்
தன் அடக்கத்துடன் இருந்தோமுங்க
தன் அடக்கத்துடன் இருந்தோமுங்க
முகத்தில் கொஞ்சம் ஒளியிருந்தும்
மனது நிறைய வலியிருந்தும்
வீட்டையே நினைச்சுக்கிட்டு
கண்மூடி உறங்கப்போனா
பதறிப்போய்
பாதி இரவினில் விழிக்கவேண்டி
கனவில் வருகிறது
கடன்களின் பிள்ளைகள்!