Saturday, 19 January 2013



 மாற்றங்கள் வேண்டி
அறிவை அயல் நாட்டுக்கு விலை பேசி
ஆயுளைக் குறைத்துக் கொள்ளும்
எங்கள் நிலை மாறவேண்டும்
கற்றுக்கொடுத்த நாட்டைவிட்டு
அன்பற்ற கானகத்தில் வாழும்
எங்கள் நிலை மாறவேண்டும்
தொலைதூர தொலைபேசி வழி
தினம் ஆசைகளை தொலைக்கின்ற
எங்கள் நிலை மாறவேண்டும்
மரத்துப்போன உணர்ச்சிகளுடன்
மழைவெயிலில் தொடரும்
எங்கள் நிலை மாறவேண்டும்

No comments:

Post a Comment