Wednesday, 28 November 2012

தூக்கம் தொலைத்த என் துக்கம்
என் தாயின் மடி இல்லாமல்
ஏதோ நாட்டின் பிடியில்  இருக்கும் வரை
எப்பொதும் ஏழைதான் 
எவ்வளவு பணம் இருந்தாலும்
தாயின் மடியை தலையணை ஆக்கிய நாட்கள்
பட்டாம்பூச்சி பிடித்துதிரிந்த நாட்கள்
அன்பான உரவுகள் அனைத்திர்க்கும்
விடை கொடுத்து விட்டுவிதியை நினைத்து
விமானம் ஏருகிரேன் என்றாவது
ஒருநாள் விடியும் என்ற நம்பிக்கையுடன்
ஒவ்வொரு முரையும் பொருளாதார​ சீர்திருத்தத்திர்காக
அண்ணனின் கை பிடித்துதிரிந்த  நாட்க்கள்
அக்காவிடம்  செல்ல சண்டை நாட்க்கள்
ஆழமர விழுதுகளை ஊஞ்சல் ஆக்கிய ஞயிரு விடுமுரை
(அ) சொல்லித்தந்த பள்ளி ஆசிரியை
ஆருதலுக்காக அசை போடுகிரேன்
அம்மா அப்பா இருந்தும் அநாதை தான் நான்
எனது நாட்கள் என்று எதுவும் இல்லை இங்கு   
அனைத்து  சொந்தங்களையும் அ(னை)த்துக்கொள்கிரேன்
ஒரு தொலைபேசி துண்டிப்பில்



Sunday, 25 November 2012


 வத்தக்குழம்பு வாசம்


புலிக் கண்மாயிலே
புளியமரத்தின் ஓரத்திலே
ஓலைக் குடிசையிலே
வற்றக்குழம்பு  வாசம் வீசயிலே
சானம் இட்ட தரையினிலே
தாயின் மடியினிலே
தலைசாய்ந்து படுக்கையிலே
உறங்கிய நேரமும் தெரியவில்லை
சுகமாக எழுந்தேன் காலையிலே
சிங்கை சென்றேன்  அன்று மாலையிலே
பஞ்சு மெத்தையிலே
படுத்து புரல்கையிலே
தூக்கம் வரவேயில்லை
நாகரீக உணவினிலே
நாக்கு செத்துப் போனதடி தாயே!
அன்று
நீ அன்பாய் பரிமாறிய வற்றக்குழம்பு

வாசம் இன்னும் வீசுதடி!
 எனது தேவையற்ற அடயாலங்கலை தொலைக்க முயர்ச்சிக்கிரேன் சிலவை மறைகின்றன் சிலவை மரைக்கின்றன என் நிஜதையும் சேர்த்து

Sunday, 21 October 2012


நான் நானாக இருந்து விட்டால் நல்லது 

முயர்ச்சிக்கிரேன் சில முறை முட்டாலாக

Monday, 10 September 2012

           









உண் புருவச்சுருக்கமும்
புற்று நோய்யும் ஒன்று தான்
இரண்டுமே கொஞ்சம் கொஞ்சமாக
எண்ணை கொன்று விடும் என்பதனால்
நன்றாய் தெரியும் எனக்கு உணை
மரக்க நிணைக்கும் போது நான்
இறக்க முயர்ச்சிக்கிரேன் என்பது
என்ன செய்வது உண்
நிணைவுகளை  சும்க்கும் போது
என் சுவாசம் கூட கணக்கிரது
உன் பாதா  வென்மைய்யில் பாலாய்  போனது மனசு                                                           பார்க்க பார்க்க இவள்  அழகு என்றும்  புதுசு                                                             மழலை இல்லை அதையும் மிஞ்சும் இவள் பேச்சு ஒரு தினுசு                                                  அழகின் ஆரம்பம் இல்லை இல்லை அகராதி என்பதெல்லாம் பலசு                                              தினம் தினம் இவள் வெக்கம் புதுசு         
                                                                                பாரத்  

Thursday, 12 July 2012

கவிதை


வாகன நெரிசல்
நிறைந்த சாலையை
சாமர்த்தியமாய்
கடந்து விடுகிறது பூனை
அதற்கு ஒன்றுமாகி விடக்கூடாது
என்று தொடங்கிய படபடப்பு
அதற்கு ஒன்றுமாகவில்லை
என்ற நிம்மதியில் முடிந்தது
இனி கடந்து போவேன்
படபடப்பின்றி
நிம்மதியுடன்
2-
கை வருடும்போது
ஒரு குழந்தையைப் போல
அமைதியாக இருக்கும்
இந்த கூழாங்கல்
எறியும் போது
ஒரு பறவையைப் போல
பறந்து போய் விடுகிறது
3-
புல்லின் வார்த்தைகள்
பனித்துளிக்குத் தெரியும்
அதை சொல்லத் தொடங்கும் போதெல்லாம்
உலர்ந்து போய்விடுகிறது
4-
எழுதும் இந்த வரியும்
எழுதப் போகும்
அடுத்த வரியும்
எப்படி உருவாகிறது என்று
எனக்குத் தெரியாது
ஒரு வேளை
அந்த வரிகளுக்குத் தெரியுமா
எனக்குத் தெரியவில்லை என்று 
5-
ரயில் தண்டவாளத்தில்
தலை வைத்து
தற்கொலை செய்து கொள்ளும்
கனவை
திரும்ப திரும்ப
ஒத்திகை செய்கிறேன்
ரயிலுக்குள்ளும்
நானே இருந்து
சங்கிலியை இழுத்து விடுவதால்
கூடி வராமல் போகிறது
6-
நதி உறைந்த போது
மீன் சிலையானது
நீர் தளர்ந்து
நதியாகிய போது
நீந்த தெரியாத சிலை
மூழ்கிப் போனது
புதுப்புது மீன்கள்
கடந்து போக

----நன்றி 
தடாகம் இணையம் .

பேஸ்புக்கில் குறித்த நபர்களுக்கு மட்டும் Offline-ல் தெரிவதற்

உலகில் பல மில்லியன் கணக்கான பயனர்கiளை தன்னகத்தே கொண்டுள்ளது பேஸ்புக் நிறுவனம்.
பேஸ்புக்கில் உங்களது நெருங்கிய நண்பருடன் அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் போது, மற்றவர்கள் தொந்தரவு செய்யாதபடி செய்யலாம்.
இதற்கு முதலில் குறிப்பிட்ட நபரின் பெயர் மீது கிளிக் செய்யவும். இதற்கு அவர் ஓன்லைனில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அவர் பெயர் லிஸ்ட்டில் இல்லை என்றால் Search-இல் பெயரை கொடுத்து தேடவும். இப்போது Chat Box ஓபன் ஆகி இருக்கும்.
அதன் பின் Settings icon மீது கிளிக் செய்து வரும் மெனுவில் Go Offine to (Name) என்பதை கிளிக் செய்து விடுங்கள். இனிமேல் அவருக்கு நீங்கள் எப்போதும் Offline -இல் இருப்பதாகவே தெரியும்.

இதை மாற்ற மறுபடியும் இதே பகுதியில் வந்து Go Online என்று கொடுத்து அவருக்கு நீங்கள் ஓன்லைன் வந்து விடலாம்.
நன்றி lankasri இணையம்